விஜய் சேதுபதிக்கு ஆஸ்கர் விருது - இயக்குநர் சங்கர் ட்வீட் ..

விஜய் சேதுபதிக்கு ஆஸ்கர் விருது - இயக்குநர் சங்கர் ட்வீட் ..

விஜய் சேதுபதி நடித்துள்ள "மாமனிதன் ' திரைப்படக் குழுவினருக்கு இயக்குநர் சங்கர் ட்வீட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார் . 

விஜய் சேதுபதி , தமன்னா நடித்துள்ள "தர்ம துரை " திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் இயக்குநர் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி இணைந்துள்ள திரைப்படம் "மாமனிதன்" . 

  . இந்த படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன்ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர்  .

இன்று " மாமனிதன் " திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில் அப் படத்தை பார்த்த இயக்குநர் ஷங்கர் தனது ட்வீட்டர் பக்கத்தில்  தெரிவித்திருப்பதாவது ; 

"மாமனிதன் " ஒரு நல்ல திரைப்படத்தைப் பார்த்த திருப்தியை அளிக்கிறது . இந்த படத்தின் இயக்குநர் சீனுராமசாமி தனது இதயத்தையும் ஆன்மாவையும் வைத்து ஒரு திரைப்படத்தைக் கொடுத்துள்ளார் .மேலும் அதோடு மக்கள் நாயகன் விஜய் சேதுபதியின் நடிப்பு ஆஸ்கர் விருதுக்குத் தகுதி படைத்தது .மாஸ் ட்ரோ இளையராஜா மற்றும் யுவன்ஷங்கர் ராஜாவின் இசை ஆத்மார்த்தமாக அமைந்துள்ளது என இயக்குநர் சங்கர் தெரிவித்துள்ளார் . 

Find Us Hereஇங்கே தேடவும்