நீச்சல் குளத்தில் மயங்கி விழுந்த அமெரிக்க வீராங்கனை... அதிர்ச்சியில் உறைந்த பார்வையாளர்கள்...!

நீச்சல் குளத்தில் மயங்கி விழுந்த அமெரிக்க வீராங்கனை... அதிர்ச்சியில் உறைந்த பார்வையாளர்கள்...!

நீச்சல் குளத்தின் அடிப்பகுதியில் அமெரிக்க வீராங்கனை மயங்கி விழுந்த சம்பவம் பார்வையாளர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

புடாபெஸ்டில் நடைபெற்ற உலக நீர்வாழ் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற 25 வயதான அனிதா அல்வாரெஸ் நீச்சல் குளத்தின் அடிப்பகுதியில் மயங்கி விழுந்த நிலையில் அவரது பயிற்சியாளர் ஆண்ட்ரியா அவரை மீட்டு முதலுதவி அளித்துள்ளார். மைதானத்தில் இச்சம்பவம் பார்வையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அமெரிக்க வீராங்கனை அனிதா அல்வாரெஸ் நீச்சல் குளத்தின் மருத்துவ மையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். அனிதாவுக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் உடல்நலம் தேறி நன்றாக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

மேலும், இது குறித்து அவருடைய பயிற்சியாளர் ஆண்ட்ரியா கூறுகையில் “இச்சம்பவம் மிகவும் பயமாக இருந்தது. உயிர்காப்பாளர்கள் அந்த இடத்தில் இல்லாததால் நான் உள்ளே குதிக்க வேண்டியிருந்தது என்று கூறினார். முன்னதாக இச்சம்பவம் குறித்து வானொலியில் பேசிய பயிற்சியாளர் “அல்வாரெஸ் வழக்கமான நேரத்தை விட அதிக நேரம் எடுத்ததால் மயக்கமடைந்தார். அவருடைய நுரையீரலில் தண்ணீர் மட்டுமே இருந்தது. அவர் மீண்டும் சுவாசிக்க ஆரம்பித்தவுடன் எல்லாம் சரியாகிவிட்டது" என்று ஃபுயெண்டஸ் கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர் “அனிதா அல்வாரெஸ் மயங்கி விழுந்த நேரத்தில் எதுவும் சரியாக இல்லை என்பதை உணர்ந்தேன். நான் லைஃப்கார்டுகளை தண்ணீரில் இறங்குமாறு கத்தினேன். ஆனால் நான் சொன்னது அவர்களுக்கு புரியவில்லை. அனிதா தற்போது நலமாக உள்ளார். மருத்துவர்களும் அவர் நலமாக உள்ளதாக கூறியுள்ளனர். அல்வாரெஸ் வியாழன் முழுவதும் ஓய்வு எடுத்த பின்பு மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு வெள்ளியன்று நடைபெறும்  போட்டியில் பங்கேற்கும் நம்பிக்கையில் இருப்பதாகவும் ஃபியூன்டெஸ் கூறினார்.

கடந்த ஆண்டு பார்சிலோனாவில் நடந்த ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் அனிதா அல்வாரெஸ் மயங்கி விழுந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Find Us Hereஇங்கே தேடவும்