பொய் வழக்கு போடுவது திமுகவிற்கு புதிதல்ல... திருச்சி சிவா மகன் கைதுக்கு அண்ணாமலை கண்டனம்...!

பொய் வழக்கு போடுவது திமுகவிற்கு புதிதல்ல... திருச்சி சிவா மகன் கைதுக்கு அண்ணாமலை கண்டனம்...!

மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா மகன் சூர்யா கைதுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

திமுகவின் கொள்கை பரப்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவாவின் மகனான சூர்யா கடந்த மே மாதம் 8ம் தேதி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். பாஜகவின் ஓபிசி பிரிவின் மாநில பொதுச்செயலாளர் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஜுன் 11ம் தேதி உளுந்தூர்பேட்டை அருகே ஆம்னி பேருந்து ஒன்றின் மீது சூர்யாவின் கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து உளுந்தூர்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் இரு தரப்பினரையும் வரவழைத்து சமாதானம் செய்து அனுப்பியுள்ளனர். மேலும், விபத்துக்கு உரிய இழப்பீடு அளிப்பதாக ஆம்னி பேருந்து சார்பில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், விபத்துக்கான இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று மிரட்டி அந்த ஆம்னி பேருந்திற்கு சொந்தமான மற்றொரு பேருந்தை சூர்யா எடுத்து சென்றுள்ளார். இதனையடுத்து ஆம்னி பேருந்து உரிமையாளர் தரப்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து திருச்சி கண்டோன்மென்ட் காவல்துறையினர் நேற்று சூர்யாவை கைது செய்தனர். இந்த சம்பவத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “ஜோடனை செய்யப்பட்ட பொய்யான வழக்குகளைத் தொடுப்பது திமுக அரசுக்குப் புதிதல்ல, அதேபோல் இந்த அரசில் பொய்யான வழக்குகளை வாங்குவதும் பாஜக தொண்டனுக்குப் புதிதல்ல. சகோதரர் சூர்யா கைது செய்யப்பட்டதை தமிழக பாஜக அரசு வன்மையாகக் கண்டிக்கிறது. பொய்யான வழக்குத் தொடுப்பதில் யார் சிறந்தவர் என்று முதல்வர் மு.க.ஸ்டலினுக்கும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகிய இருவருக்கும் கடுமையான போட்டி நிலவி வருகிறது. பார்த்துக் கொண்டிருக்கிறோம், பொறுத்துக் கொண்டிருக்கிறோம், எங்கள் நேரம் வரும்வரை காத்துக் கொண்டிருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்