நம்பி நாராயணன் தமிழர் என்பது தமிழர்களுக்கே தெரியவில்லை - நடிகர் மாதவன் பேட்டி

நம்பி நாராயணன் தமிழர் என்பது தமிழர்களுக்கே தெரியவில்லை - நடிகர் மாதவன் பேட்டி

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் தமிழர் என்பது தமிழர்களுக்கே தெரியவில்லை என்பதால் தான் அவரின் வாழ்க்கையைத் திரைப்படமாக  எடுத்தேன் என நடிகர் மாதவன் தெரிவித்துள்ளார் .

மாதவன் இயக்கி , நடிக்கும் திரைப்படம் "ராக்கெட்ரி ".இது தமிழ் , ஹிந்தி ,ஆங்கிலம் ,  தெலுங்கு , மலையாளம் என ஐந்து மொழிகளில் உருவாகிய இப்படம் வருகிற ஜூலை 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகுகிறது .

இந்த படத்தில் மாதவனுக்கு ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார் .இவர்களுடன் ரஜித் கபூர் , ரவி ராகவேந்திரா , மிஷா கோஷல் , கார்த்திக் குமார் மற்றும் தினேஷ் உள்ளிடோர் நடித்துள்ளனர் . மேலும் இப்படத்தில் ஷாருக்கான் மற்றும் சூர்யா கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளனர் .இப்படத்துக்கு சாம்சிஎஸ் இசையமைத்துள்ளார் .

"ராக்கெட்ரி ' திரைப்படத்துக்கான  செய்தியாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடந்தது . அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாதவன் அப்படத்தைப் பற்றிப் பேசியதாவது ; 

நம்பி நாராயணனைச் சந்திக்கும் முன் இருந்த மாதவனுக்கும்  சந்தித்த பின் இருந்த மாதவனுக்கு நிறைய வித்தியாசம் இருக்கிறது .மேலும் இந்த படத்தின் கதையை நான்  எழுதுவதற்கு எனக்கு 7 மாதங்கள் ஆனது .நாம் எல்லோருமே ஒரு முக்கியமான தவறு ஒன்று செய்திருப்போம் .அது என்னவென்றால் நம் நாட்டிற்காக உழைக்கும் தேச பக்தர்களை முழுமையாகத் தெரிந்து கொள்ளாதது தான் . அதுவும் நம் நாட்டிற்காக தன் உயிரையே  பணயம் வைத்து அவர்கள் செய்த சாதனையைக் காட்ட வேண்டும் என்பதற்காகத் தான் நான் இந்த படத்தை எடுக்க முடிவு செய்தேன் .

அதோடு நம்பி நாராயணன் தமிழர் என்பது தமிழர்களுக்கே தெரியவில்லை என்பதால் தான் நான் இந்த படத்தை இயக்க வேண்டும் என்றும்  நினைத்தேன் .

ஆனால் இது வரை நான் எந்தவொரு படத்தையும் நான் இயக்கினது கிடையாது . படப்பிடிப்பு தொடங்க இருந்த 25 நாட்கள் முன்பு இந்த படத்தின் இயக்குநர் படத்தை இயக்கமாட்டேன் என்று கூறி சென்றுவிட்டார்  .  தமிழ் , ஆங்கிலம் , ஹிந்தி என மூன்று மொழிகளிலும் இயக்க வேண்டிய சூழல் இருந்ததால் நானே இந்த படத்தை இயக்க முடிவு செய்தேன் . 

மேலும் 3 மொழிகளில் 8 நாடுகளில் எடுக்கப் பட்ட படம் இது . அதுவும் ஆறு மாத ஒத்திகைக்குப் பிறகு தான்  இந்த படத்தை எடுக்க ஆரம்பித்தோம் . இந்த பட்டதிற்காக எனது பல்லை மாற்றியுள்ளேன் .அதோடு உடல் எடையைக் கூட்டி 14 நாட்களில் மீண்டும் உடல் எடையைக் குறைத்து நம்பி நாராயணன் போல உண்மையான தோற்றத்தில் இருக்க வேண்டும் என்பதற்காகவே அனைத்தையும் உருவாக்கினேன் . 

ஆனால் ஒரு சில காரணங்களால் பல உண்மைகளை இந்த படத்தில் காட்ட முடியவில்லை . அவரின் வாழ்க்கையை முழுவதுமாக காட்டுவதற்கு 11 மணி நேரம் தேவைப்பட்டது . படத்திற்காக எந்தவொரு சமரசமும் செய்யவில்லை . பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இந்த படத்தில்  நடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார் . இதில்  கௌரவ தோற்றத்தில் நடித்த ஷாருக்கான் மற்றும் சூர்யா இருவரும் படத்தில் நடித்தற்கான எந்தவொரு ஊதியமும் வாங்கவில்லை . நானும் அவர்களுக்கு எதுவும் செய்யவில்லை என நினைக்கும் போது அவமானமாக உள்ளது  என மாதவன் குறிப்பிட்டுள்ளார் . 

இப்படம் வருகிற ஜூலை 1 ஆம் தேதி தமிழ் , ஆங்கிலம் , ஹிந்தி எனப் பல மொழிகளில் வெளியாகிறது .

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஆன்லைன் விளையாட்டுக்கள் முழுமையாக தடை செய்யப்படவில்லை : சட்டத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.ரகுபதியின் இந்த கருத்தை எப்படி பார்க்கிறீர்கள்?

  • முழுமையான தடை அவசியம்
  • கண்துடைப்பான நடவடிக்கை
  • மக்களை ஏமாற்றும் செயல்
  • சரியான கருத்துதான்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்