விஜய் சேதுபதியின் 19(1)(a) படத்தின் போஸ்டர் வெளியீடு

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கும் 19(1)(a) என்ற மலையாள திரைப்படத்தின் போஸ்டரை படக்குழுவினரை வெளியிட்டுள்ளனர் .
விஜய் சேதுபதி நடித்துள்ள "மாமனிதன் " திரைப்படம் நாளை வெளியாகிறது . இந்நிலையில் விஜய் சேதுபதி நடிக்கும் அடுத்த திரைப்படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது .19(1)(a) திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்க உள்ளார் .
புது முக இயக்குநர் இந்து இயக்கும் இந்த படத்திற்குக் கோவிந்த வசந்தா இசையமைக்க உள்ளார் .
கருத்துச் சுதந்திரத்தினை தெரிவிக்கும் படமாக இந்த படத்தின் கதைக்கரு அமைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளன . மேலும் 19(1)(a ) என்ற இந்த படத்தின் தலைப்பு இந்திய அரசியலமைப்பின் கருத்து தெரிவிக்கும் உரிமையை உறுதி செய்யும் சட்டப் பிரிவாகும் . இந்நிலையில் இந்த படம் நேரடியாக ஓடிடியில் தளத்தில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது .