சாகசம் செய்ய நினனத்து, படுகாயமடைந்த கன்னட நடிகர்!

சாகசம் செய்ய நினனத்து, படுகாயமடைந்த கன்னட நடிகர்!

கன்னட நடிகர் திக்நாத் கோவாவில் பேக் ஃபிளிப் செய்ய முயன்றபோது காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

கர்நாடகாவை சேர்ந்த 38 வயதான நடிகர் திகாந்த் மஞ்சாலே ஒரு சாகசப் பிரியர். அலைச் சறுக்கு பிரியர், நீச்சல் வீரர், மலை ஏறுபவர். விடுமுறையைக் கொண்டாட தனது மனைவியுடன் கோவா சென்றுள்ளார். அங்கும் அவர் சில சாகசப் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார். அப்போது அவரது வழக்கமான பேக் ஃப்ளிப் (BACK FLIP) சாகசத்தை செய்ய முயன்றுள்ளார். ஆனால் எதிர்பாராத விதமாக கீழே விழுந்த அவரது முதுகுத் தண்டு மற்றும் கழுத்தில் பயங்கர காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது

உடனடியாக கோவாவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்குள்ள மருத்துவர்கள் முதுகுத்தண்டில் பயங்கர காயம் ஏற்பட்டுள்ளதால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். ஆனால் மனைவி திகாந்தை, பெங்களூரு கொண்டு சென்று அங்கு இந்த சிகிச்சையை மேற்கொள்ள விருப்பம் தெரிவித்தார்.

இதையடுத்து, திகாந்த் விமானம் மூலம் பெங்களூரு கொண்டு செல்லப்பட்டு, மணிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில் தற்போது திகாந்த் நலமாக இருப்பதாக கூறப்படுகிறது. இன்று மாலை அவரை டிஸ்சார்ஜ் செய்ய மருத்துவர்கள் முடிவு செய்திருப்பதாக நிர்வாகம் தரப்பில் அறிக்கை வெளியாகி உள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்