" விக்ரம் " படம் ஓடிடியில் வெளியாகும் எனத் தகவல்

கமல்ஹாசன்  நடித்துள்ள "விக்ரம் " திரைப்படம் ஜூலை 8 -ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் தகவல் தெரிவித்துள்ளனர் .

பிரமாண்டத்தின் உச்சத்தைப் பெற்ற விக்ரம் திரைப்படம் தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது .தற்போது இந்தப்படம் 3 வாரங்களில்  350 கோடி வசூலைப் பெற்றுள்ளது .விரைவில் இந்த படம் 500 கோடியை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .

இந்த நிலையில் இந்த படம் வருகிற ஜூலை 8 - ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் எனத் தகவல் கிடைத்துள்ளது .ஓடிடி நிறுவனத்துடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் படி விக்ரம் திரைப்படம் வெளியான 28 நாட்களில்  ஓடிடியில் வெளியாகிறது .

ஓடிடியில்  வெளியாகும் இந்நிகழ்வு ரசிகர்களுக்கு அதிர்ச்சியும் ஆனந்தத்தையும் தந்துள்ளது .விக்ரம் படம் தனக்கு லாபகரமான படமாக  உள்ளது என விக்ரம் படம் வெற்றி விழாவில் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார் .

Find Us Hereஇங்கே தேடவும்