சிவகார்த்திகேயன் படத்துக்கு இவ்வளவு போட்டியா ?

சிவகார்த்திகேயன் படத்துக்கு இவ்வளவு போட்டியா ?

சிவகார்த்திகேயன் நடிக்கும் " பிரின்ஸ் " திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது .

 தெலுங்கில் வெற்றிகரமாக ஓடிய ஜதி ரத்னாலு திரைப்படத்தின்  இயக்குநர் அனுதீப் இப்படத்தை இயக்கியுள்ளார் .தொடர்ந்து டான் , டாக்டர் என வெற்றி படங்களை கொடுத்த பிறகு சிவகார்த்திகேயன் நடிக்கும் பிரின்ஸ் திரைப்படம் தமிழ் ,தெலுங்கு என இரண்டு மொழிகளிலும்  உருவாகியுள்ளது .

பிரின்ஸ் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஆங்கில நடிகை மரியா நடித்துள்ளார் . மேலும் சத்யராஜ் , ப்ரேம்ஜி , உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் . இந்த படத்துக்கு s.தமன் இசையமைத்துள்ளார் .

முதலில் பிரின்ஸ் திரைப்படம் ஆகஸ்ட் 21-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது . தற்போது இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது . இதற்காக  அறிவிக்கப்பட்ட வீடியோவில் சிவகார்த்திகேயன் , சத்யராஜ் , மரியா மற்றும் இயக்குநர் அனுதீப்  ஆகியோர் பங்கேற்றிருந்தன .

இந்நிலையில்  ஏற்கனவே தீபாவளிக்கு  அஜித்தின் AK61 , கார்த்தியின்  சர்தார் , ஜெயம் ரவியின் இறைவன் படங்கள் வெளியாகியுள்ளது .தற்போது அந்த வரிசையில் சிவகார்த்திகேயனின்  பிரின்ஸ் திரைப்படம் வெளியாவது கடும் போட்டியாக இருக்கும் என  எதிர்பார்க்கப்படுகிறது .

Find Us Hereஇங்கே தேடவும்