ஷோபி மாஸ்டர், அனிருத்துக்கு நன்றி தெரிவித்த சிவகார்த்திகேயன்...!

ஷோபி மாஸ்டர், அனிருத்துக்கு நன்றி தெரிவித்த சிவகார்த்திகேயன்...!

சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படத்தில் இடம்பெற்ற ஜலபுலா ஜங்கு பாடலை உருவாக்கிய ஷோபி மாஸ்டர், அனிருத்துக்கு சிவகார்த்திகேயன் நன்றி தெரிவித்துள்ளார். 

அறிமுக இயக்குநரான சிபி சக்கரவர்த்தி இயக்கிய டான் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்தார். கல்லூரி வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இப்படத்தின் பல பாடல்கள் தரவரிசை பட்டியலிலும் இடம் பிடித்துள்ளது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற ஜலபுலா ஜங்கு பாடம் அதிக கவனத்தை ஈர்த்த நிலையில் இந்த பாடலை உருவாக்கிய ஷோபி மாஸ்டர் மற்றும் அனிருத்துக்கு நடிகர் சிவகார்த்திகேயன் நன்றி தெரிவித்துள்ளார். 

ஜலபுலா ஜங்கு பாடல் வீடியோ ஸ்ட்ரீமிங் தளத்தில் ஒரு மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது. மேலும், இது இசை தளங்களில் இன்னும் முதலிடத்தில் உள்ளது. பொறியியல் படிப்பு பயிலும் கதாநாயகன் கடைசியில் டிகிரி வாங்குகிறா என்பதை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படத்தில் எஸ்.ஜே.சூர்டா, சமுத்திரக்கனி, பிரியங்கா மோகன், பாலா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

வலுவான உணர்ச்சித் தொடர்பை கொண்ட டான் படம் ரூ.110 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சிவகார்த்திகேயனின் அதிக வசூல் செய்த படமாக மாறியது என்பது குறிப்பிடத்தக்கது.

Find Us Hereஇங்கே தேடவும்