தாய்லாந்தில் தேனிலவு கொண்டாடும் நட்சத்திர தம்பதி...!

தாய்லாந்தில் தேனிலவு கொண்டாடும் நட்சத்திர தம்பதி...!

நட்சத்திர தம்பதிகளான நயன்தாரா - விக்னேஷ் சிவன் தாய்லாந்தில் தேனிலவு கொண்டாடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சுமார் 7 வருடங்களுக்கும் மேல் காதலித்து வந்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜுன் 9 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். சென்னை மகாபலிபுரத்தில் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்ற திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஷாருக்கான் உள்ளிட்ட திரைப்பிரலங்கள் கலந்து கொண்டனர். இவர்களின் திருமணத்தை ஒளிபரப்பு செய்யும் உரிமையை நெட்பிளிக்ஸ் வாங்கியதால் ஓரிரு திருமண புகைப்படங்கள் மட்டுமே இணையதளத்தில் வெளியானது.

மேலும், திருமண விருந்தாக தமிழகத்தில் உள்ள முதியோர் இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லம் என சுமார் 1 லட்சம் பேருக்கு கல்யாண விருந்து அளிக்கப்பட்டது. திருமணம் முடிந்த மறுநாளே திருப்பதி சென்ற நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியினர் கோயில் மாடவீதியில் காலணியுடன் நடந்து சென்றதாக சர்ச்சைகள் ஏற்பட்டது. பின்னர் தனது சொந்த ஊரான கொச்சிக்கு சென்ற நயன்தாரா தனது அம்மா மற்றும் காதல் கணவர் விக்னேஷ் சிவனுடன் கேரளாவில் உள்ள ரெஸ்டாரெண்டுக்கு சென்று அங்கிருந்த ஊழியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். 

இந்நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது மனைவி நயன்தாராவுடன் தாய்லாந்தில் தேனிலவு கொண்டாடி வருவதாக ஹோட்டலில் எடுக்கப்பட்ட ஒரு சில புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவனுக்கு அஜித்துடன் அடுத்த படம், நயன்தாராவுக்கு ஷாருக்கான், சீரஞ்சிவுடன் படம் என பிஸியாக இருக்கும் இருவரும் தேனிலவு செல்ல மாட்டார்கள் என்று தகவல் வெளிவந்த நிலையில் தற்போது நயன்தாரா - விக்னேஷ் சிவன் தாய்லாந்தில் தேனிலவு கொண்டாடும் புகைப்படங்கள் வெளியான நிலையில் ரசிகர்கள் நட்சத்திர தம்பதிகளுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Find Us Hereஇங்கே தேடவும்