" லைட்இயர் " படத்தை வெளியிடுவதற்கு 14 நாடுகள் தடை :

நாளை வெளியாகவுள்ள "லைட்இயர் " திரைப்படத்தை வெளியிடுவதற்கு 14 நாடுகள் தடை விதித்துள்ளது .

1995-ல் வெளியான "டாய் ஸ்டோரி " என்ற அனிமேஷன் திரைப்படம் உலக முழுவதும் குழந்தைகளிடையே  நல்ல வரவேற்பைப் பெற்றுவந்தது .இதைத் தொடர்ந்து இந்த படத்தின் அடுத்த பாகங்கள் கார்ட்டூன் மற்றும் 3டி அனிமேஷன் வடிவிலும் திரைப்படம் வெளியாகின .

குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற "பஸ் லைட்இயர்" என்ற கதாபாத்திரம் உலக முழுதும் பிரபலமானது .

தற்போது இந்த கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு "லைட் இயர் " என்ற திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது .இப்படம் உலகம் முழுவதும் நாளை வெளியாக உள்ள நிலையில் அந்த படத்தில் தன்பாலின முத்தக்காட்சிகள் இடம் பெற்றுள்ளதால்  , இது அரபு நாட்டின் நம்பிக்கைகளுக்கு எதிராக இருக்கிறது என்று கூறி சவுதி அரேபியா , இந்தோனேசிய உள்ளிட்ட 14 நாடுகள் இப்படத்திற்குத் தடை விதித்துள்ளது .

Find Us Hereஇங்கே தேடவும்