டான் படத்திற்கு Review கொடுத்த பாமக நிறுவனர் ராமதாஸ்....!

டான் படத்திற்கு Review கொடுத்த பாமக நிறுவனர் ராமதாஸ்....!

டான் திரைப்படம் அனைவராலும் பார்க்கப்பட வேண்டிய ஒன்றாகும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான திரைப்படம் டான். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். பிரியங்கா மோகன் டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா, மனோபாலா, சிவாங்கி, பாலா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

சிவகார்த்திகேயனின் எஸ்.கே. புரோடக்‌ஷனும், லைகா நிறுவனமும் இணைந்து தயாரித்த டான் திரைப்படம் கடந்த மாதம் 13 ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி 100 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்தது. கல்லூரியில் ஆசிரியராக பணிபுரியும் எஸ்.ஜே.சூர்யாவுக்கும் இடையே ஏற்படும் பிரச்னைக்கு மத்தியில் சிவகார்த்திகேயன் இன்ஜினியரிங் டிகிரி வாங்கினாரா என்பதே டான் திரைப்படத்தின் கதை. ரசிகர்கள் மத்தியில் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் டான் திரைப்படத்தை பாராட்டியுள்ளார். இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படம் பார்த்தேன். “பெற்றோரை அவர்கள் இருக்கும் போதே கொண்டாடுங்கள் (Celebrate Your Parents When They Are With You)”  என்ற பாடத்தை சொல்லும் அந்த திரைப்படம் அனைவராலும் பார்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்!” என பதிவிட்டுள்ளார்.

இதற்கு முன்னதாக டான் திரைப்படத்தை பார்த்துவிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநர் சிபி சக்கரவர்த்தியை நேரில் வரவழைத்து பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Find Us Hereஇங்கே தேடவும்