இந்த மறக்க முடியாத நாளில் " சிவாஜி தி பாஸ் " ரஜினிகாந்தை நேரில் சந்தித்தது மிகவும் மகிழ்ச்சி :

இந்த மறக்க முடியாத நாளில்

ரஜினிகாந்த் நடித்த " சிவாஜி " திரைப்படம் வெளியாகி இன்றுடன் 15 ஆண்டுகளாகிய நிலையில் அதன் நெகிழ்வால் இயக்குநர் சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் .

ஏவிஏம் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான பிரமாண்டமான திரைப்படம் சிவாஜி . இந்த படம் மக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றது . இதில் ரஜினிகாந்த் " சிவாஜி , எம்.ஜி.ஆர் " என இரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதிலும் ''மொட்டை பாஷாக " ரஜினி வரும் காட்சி திரையரங்கமே அதிரும் அளவுக்கு மக்களால் கொண்டாடப்பட்டது .

மேலும் ரகுமானின் இசை , சின்ன கலைவானாரின் நகைச்சுவை , ஸ்ரேயாவின் நடிப்பு எல்லாம் இன்றும் ரசிகர்கள் ரசித்து வருகின்றன . சிவாஜி படத்திற்குப் பிறகு கொண்டாட்டமான படம் ரஜினி ரசிகர்களுக்கு இதுவரை கிடைத்ததே இல்லை என்றே சொல்லலாம் .

இந்நிலையில் சிவாஜி திரைப்படம்  வெளியாகி 15 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் விதமாக இயக்குநர் சங்கர் தனது மகள் அதிதி உடன் ரஜினிகாந்தை அவரின் இல்லத்தில் சந்தித்தார் .

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்த சங்கர் ;

இந்த மறக்க முடியாத நாளில்  " சிவாஜி தி பாஸ் " ரஜினிகாந்தை நேரில் சந்தித்தது மிகவும் மகிழ்ச்சி  மற்றும் உங்களுடைய அன்பு நேர்மையான எண்ணத்தின் காரணமாக இந்த நாள் அமைந்தது என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் .அதோடு சங்கரின் மகளும் ரஜினிகாந்துடன் எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் .

  

Find Us Hereஇங்கே தேடவும்