கமல் உங்களுக்கு என்ன கொடுத்தார் என்ற ரசிகரின் கேள்விக்கு அனிருத்தின் பதில் :

கமல் உங்களுக்கு  என்ன கொடுத்தார் என்ற ரசிகரின் கேள்விக்கு அனிருத்தின் பதில் :

லோகேஷ்-க்கு கார் ,சூர்யாவுக்கு வாட்ச் மற்றும் உலக நாயகன் அவர்கள் உங்களுக்கு என்ன கொடுத்தார் என்ற ரசிகர்களின் கேள்விக்கு இசையமைப்பாளர் அனிருத் பதிலளித்துள்ளார் .

ஜூன் 3 -ஆம் தேதி வெளியான " விக்ரம் " திரைப்படம் தமிழ் , தெலுகு , மலையாளம் , கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது .படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கமல்ஹாசன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் -க்கு ரூ .80 லட்சம் மதிப்புள்ள "LEXUS " கார் , மற்றும் விக்ரம் படத்தில் ரோலக்ஸ்-ஆக நடித்த  நடிகர் சூர்யாவிற்கு ரோலக்ஸ் வாட்ச்-யும் பரிசளித்துள்ளார் .

இதையடுத்து மக்கள் பலரும் எதிர்பார்த்துக் கேட்கப்படும் அடுத்த கேள்வி " நாயகனின் " அடுத்த பரிசு  யாருக்கு என்பதுதான் .ஏனென்றால் விக்ரம் படத்தின் பெரிய பலமே இசையமைப்பாளர் அனிருத்தின் இசை தான் படத்தின் மிகப்பெரிய வலுவாகும் .

ஆகவே கேரள மாநிலம் திரி சூரில் உள்ள திரையரங்குகளுக்கு இயக்குநர் லோகேஷ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் நேரில் சென்று ரசிகர்களைச் சந்தித்தனர்.அப்போது ரசிகர் ஒருவர் அனிருத்திடம் கமல் லோகேஷக்கு -கார் ,சூர்யாவுக்கு -ரோலக்ஸ் வாட்ச் பரிசளித்த நிலையில் , உங்களுக்கு அவர் என்ன தரப் போகிறார் என்று கேட்டார் .

அதற்கு அனிருத் தெரிவித்திருப்பதாவது ,கமல் சார் எனக்கு "விக்ரம் " கொடுத்தார் என்று அதிரடியாகப் பதிலளித்துள்ளார் .அதைக் கண்டு ரசிகர்கள் மனம் நெகிழ்ந்தனர் .

Find Us Hereஇங்கே தேடவும்