நயன்தாரா, விக்னேஷ் ஆகியோர் கேரளாவில் உள்ள கோவிலுக்கு சென்ற படங்கள் வைரல்...!

நயன்தாரா, விக்னேஷ் ஆகியோர் கேரளாவில் உள்ள கோவிலுக்கு சென்ற படங்கள் வைரல்...!

நயன்தாரா, விக்னேஷ் ஆகியோர் கேரளாவில் உள்ள கோவிலுக்கு சென்ற படங்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

புதுமணத் தம்பதிகள் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோர் கடந்த 9ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். அவர்களது திருமணம் மகாபலிபுரத்தில் வெகு விமரிசையாக நடைப்பெற்றது. இதில் திரை பிரபலங்கள் பலர் பங்கேற்று மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

நயன்தாராவின் பெற்றோர் கேரள மாநிலம் கொச்சியில் வசித்து வருகின்றனர். உடல்நலக் குறைவு காரணமாக அவர்கள் 2 பேரும் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் பெற்றோரிடம் ஆசி பெறுவதற்காக நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதி சென்னையிலிருந்து கொச்சிக்கு விமானத்தில் புறப்பட்டு சென்று பெற்றோரை சந்தித்து ஆசி வாங்கினர். 

இதையடுத்து புதுமணத் தம்பதிகள் கேரளாவின் செட்டிகுளங்கரா தேவி கோவிலுக்கு சென்று அங்கு பூஜை செய்தனர்.

இந்நிலையில் அவர்கள் கோவிலுக்கு சென்ற படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படங்களில் நயன்தாரா மலர் இன உடையிலும், விக்னேஷ் சிவன் பாரம்பரிய முண்டுகளிலும் காணப்பட்டனர்.

Find Us Hereஇங்கே தேடவும்