நடிகர் சங்க கட்டிடம் குறித்து நிறைய ஆலோசனைகளை ரஜினி கூறியுள்ளதாக நடிகர் சங்க தலைவரும், நடிகருமான நாசர் கூறியுள்ளார்.
நடிகர் சங்க கட்டிடம் குறித்து நிறைய ஆலோசனைகளை ரஜினி கூறியுள்ளதாக நடிகர் சங்க தலைவரும், நடிகருமான நாசர் கூறியுள்ளார்.
இன்று நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி மற்றும் துணைத்தலைவர் பூச்சி முருகன் மூவரும் நடிகர் ரஜினிகாந்த் அவர்களை போயஸ் கார்டனில் அவரது வீட்டில் நேரில் சந்தித்தனர். இதுகுறித்து நடிகர் நாசர் அளித்த பேட்டியில் “ இரண்டு வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு நடிகர் சங்கத் தேர்தல் முடிந்து, நடிகர் சங்க கட்டிட பணிகளை துவங்க உள்ளோம். அதற்காக ஒவ்வொருவராக சந்தித்துக் கொண்டிருக்கிறோம். அதன்படி இன்று நடிகர் ரஜினிகாந்த் சார் அவர்களை மரியாதை நிமிர்த்தமாக சந்தித்தோம்.
அப்போது அவர், கட்டட பணிகள் பற்றி மிகவும் அக்கறையாக விசாரித்தார். மேலும், கட்டிடம் குறித்து நிறைய ஆலோசனைகளையும் வழங்கினார்” என்று கூறினார்.