கார்த்தியின் வாழ்க்கையில் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று...
கார்த்தியின் வாழ்க்கையில் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று...
நடிகர் சிவக்குமாரின் மகன் நடிகர் கார்த்தி. சினிமாவில் நுழைந்து 15 வருடங்கள் ஆகின்றன. சினிமாவில் கமர்ஷியல் வெற்றி படங்கள் தொடங்கி பரிசோதனை களங்களிலும் ஈடுபட்டுள்ளார். பருத்திவீரனில் அறிமுகமாகி மணிரத்தினத்தின் பொன்னியன் செல்வனில் விந்தியத்தேவனாக நீள்கிறது. மே 25 அவரது பிறந்தநாள். இப்போது அவர் 45வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
தற்போது கார்த்தியின் கைவசம் பொன்னியன் செல்வன், விருமன், இரட்டை வேடங்களில் நடிக்கும் சர்தார் ஆகிய படங்கள் உள்ளன. அவரது பிறந்தநாளை ஒட்டி விருமன் படக்குழு முதல் பாடலை வெளியிட்டுள்ளது. கார்த்தி கல்லூரி படிப்பை முடித்து விட்டு மேற்ப்படிப்பு படிக்க அமெரிக்கா சென்றார். ஆனால் அவர் மனதில் சினிமா ஆசை கனந்துக்கொண்டே இருந்தது. இந்தியா திரும்பியதும் சினிமா துறைக்கு செல்லபோவதாக வீட்டில் சொன்னார். முதலில் குடும்பத்தில் ஏற்கவில்லை.
பிறகு அதற்கு பச்சைக்கொடி காட்டப்பட்டது. மணிரத்தினத்திடம் உதவி இயக்குநராக சேர்ந்தார். ஆயுத எழுத்து படத்தில் நடிகர் சித்தார்த் பாத்திரத்தில் நடிக்க முதலில் கார்த்தியிடம் தான் கேட்கப்பட்டது. அதனை கார்த்தி மறுத்து விட்டார். ஆனாலும் சினிமா வாய்ப்புகள் வந்து அவரை தட்டிக்கொண்டே இருந்தது. சரி ஒரு படத்தில் நடித்துதான் பார்ப்போம் என்று முடியு செய்தார். அதற்காக நடனம், சண்டை பயிற்சி கற்றுக்கொள்ள துவங்கினார். அப்போதுதான் பருத்திவீரன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
பருத்திவீரன் படத்தில் கதாநாயனாக அறிமுகமானார் கார்த்தி. அவருக்கு மட்டுமல்ல தமிழ் சினிமாவுக்கு முக்கிய படமாக அது அமைந்தது. அதில் ஏற்றி கட்டிய லுங்கி, பரட்டை தலை, தாடி மீசையென அப்படியே மண்ணின் மைந்தனாக இருந்தார். முதல் படத்திலே பல விருதுகளை பெற்றார். படம் வெளியாகி 15 ஆண்டுகள் கடந்த நிலையில், தன்னுடைய முதல் படத்தை மறக்க முடியாததாக மாற்றி கொடுத்த அமீருக்கு நன்றி தெரிவித்து இருந்தார். ஆசைக்காகதான் பருத்திவீரன் படத்தில் நடித்தேன். அது சரிபட்டு வாராத பட்சத்தில் திரும்ப டைரக்ஷனுக்கு சென்று விடலாம் என்றுதான் இருந்தேன் என சிரித்துக்கொண்டே சொல்கிறார்.
எந்த விஷயத்தில் ஈடுபட்டாலும் முதலில் தைரியம் வேண்டும். நான் அந்த துணிச்சில்தான் நடிக்க துவங்கினேன். நீங்கள் எதுவாக வேண்டும் என ஆசைப்படுக்கிறீர்களோ அதற்கான முயற்சியை கை விடக்கூடாது. அதற்கான தகுதிகளை வளர்த்துக்கொள்ள முயல வேண்டும் என என் அண்ணன் சொல்லியிருக்கிறான். நான் வெற்றிக்கு பொறுமையை கைபிடிப்பவன் என்கிறார் கார்த்தி. பருத்தி வீரன் படத்தில் தொடங்கி ஆயிரத்தில் ஒருவன், பையா, காஷ்மோரா, மெட்ராஸ், கைதி என பரிசோதனை கதை களங்களை தேர்ந்தெடுப்பதிலும் புதுமுக இயக்குநர்களை நம்பி படம் நடிப்பதிலும் கார்த்தி எப்போதும் தயங்கியதே இல்லை. அந்த வகையில் தோழா, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய திரைப்படங்களின் கதை தனக்கு கேட்டதுமே பிடித்து விட்டது என்பார்.
கார்த்தி வண்டலூரிலுள்ள இன்ஜினியரிங் கல்லூரியில்தான் படித்தார். அவன் உலக நட்புகளை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதால் பேருந்தில்தான் கல்லுரிக்கு அனுப்பியுனார் நடிகர் சிவக்குமார். பெரும்பாலும் அவர் பல்லவன் பேருந்தில்தான் பயணத்திற்கிறார். அப்போது தான் எடுத்துக்கொண்ட போட்டோகளை சமூகவலைதளங்களில் நண்பர்களோடு பகிர்ந்துக்கொண்டு தன் மகிழ்ச்சியை அடைந்ததை பற்றி தெரிவித்திருக்கிறார். சூர்யா மாணவர்களின் கல்விக்கு உதவதற்காக அகரம் பவுண்டேஷன் மூலம் உதவுகிறார். அதேபோல் கார்த்தியோ விவசாயம் மற்றும் உழவர்களுக்காக உழவர் பவுண்டேஷன் நிறுவி அதன் மூலம் அவர்களுக்கு உதவி புரிந்து வருகிறார்.
கார்த்தி மணிரத்தினத்திடம் உதவி இயக்குநர் மூலமாக சினிமாவில் நுழைந்தார். அவர் இயக்கிய காற்று வெளியிடை படத்தில் நடித்தார். இப்போது அவரது கனவுப் படமான பொன்னியன் செல்வன் படத்தில் விந்தியத்தேவனாக நடிக்கிறார். இப்படம் இந்த வருடம் இறுதியில் வெளியாகிறது. கார்த்தி எந்த இயக்கநருடனும் இரண்டாவது முறையாக கைகோர்த்ததில்லை. அதை மணிரத்தினம் மூலம் உடைக்கிறார் கார்த்தி.
KUTTIKANNAN