பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட நடிகை உயிரிழப்பு.

பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட நடிகை உயிரிழப்பு.

பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட நடிகை உயிரிழப்பு.

பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட கன்னட சின்னத்திரை நடிகை சேத்தனா ராஜ் உயிரிழந்துள்ளார்.

நடிகர், நடிகைகள் தங்களின் அழகை மெருகூட்ட பிளாஸ்டிக் சர்ஜரி மேற்கொள்வர். இந்நிலையில், 21 வயதான சேத்தனா ராஜ் எனும் கன்னட சின்னத்திரை நடிகை பெங்களூருவில் இயங்கி வரும் ஒரு தனியார் மருத்துவமனையில் Fat – Free பிளாஸ்டிக் சர்ஜரிக்காக நேற்று அனுமதிக்கப்பட்டார். 

பின், அவருக்கு மயக்க மருந்து கொடுத்து மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். சிகிச்சைக்கு அவரின் உடல் ஒத்துழைக்கவில்லை எனத் தெரிகிறது. அறுவை சிகிச்சை முடிந்த சில மணி நேரத்தில் அவர் உயிரிழந்துள்ளார். 

தொடர்ந்து உடனடியாக சேத்தனா ராஜை அருகே இருந்த வேறொரு மருத்துவமனைக்கு சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் கொண்டு சென்றனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சேத்தனா ராஜ் இறந்துவிட்டதாக கூறி, போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.

சேத்தனா அறுவை சிகிச்சை குறித்து பெற்றோரிடம் தெரிவிக்காமல் தன் நண்பர்களுடன் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த அவரின் பெற்றோர்கள் மருத்துவர்களின் அலட்சியத்தால் தான் தன் மகளின் மரணம் ஏற்பட்டதாக புகார் தெரிவித்துள்ளனர்.

Find Us Hereஇங்கே தேடவும்