முதல் மனைவியுடன் விவாகரத்து.... இரண்டாவது திருமண செய்துகொண்ட பிரபல இசையமைப்பாளர்

முதல் மனைவியுடன் விவாகரத்து.... இரண்டாவது திருமண செய்துகொண்ட பிரபல இசையமைப்பாளர்
பிரபல இசையமைப்பாளர் டி.இமான் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்த நிலையில் இன்று 2வது திருமணம் செய்து கொண்டார்.

தமிழ்த் திரையுலகின் முன்னனி இசையமைப்பாளர்களில் ஒருவரான டி.இமான், பதிமூன்று ஆண்டுகளுக்குப் பின் தன் இல்வாழ்க்கைத் துணையை சட்டப்பூர்வமாகப் பிரிந்தார்.

டிசம்பர் 29,2021 அன்று அவர் வெளீயிட்டிருந்த அறிவிப்பில்,“வாழ்க்கை நம்மை பல்வேறு பாதைகளுக்கு இட்டுச் செல்லும். அந்த வகையில் எனது மனைவி மோனிகா ரிச்சர்டும் நானும் சட்டரீதியாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டோம். இனி நாங்கள் கணவன்-மனைவி இல்லை.

எனது நலன் மீது அக்கறை கொண்டவர்கள், இசை இரசிகர்கள், ஊடகத்துறையினர் அனைவரும் எங்கள் தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பளித்து, வாழ்க்கையில் நாங்கள் முன்னோக்கிச் செல்ல உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். உங்கள் புரிதலுக்கும், அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி” என்று அவர் பதிவிட்டிருந்தார்.

டி.இமான்-மோனிகா ரிச்சர்ட் இருவருக்கும் 2008 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், இமான் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார்.

அவருடைய இரண்டாவது திருமணம் இன்று சென்னையில் நடந்தது. தமிழ்த்திரையுலகில் கலை இயக்குநராகப் பணியாற்றி மறைந்த உபால்டுவின் மகள் அமலியை அவர் இரண்டாவதாகத் திருமணம் செய்தார்.

சென்னையிலுள்ள நட்சத்திர விடுதியொன்றில் இன்று திருமணம் இருதரப்புப் பெற்றோர்களின் ஆசியுடன் நடைபெற்றது. இத்திருமணத்துக்கு மிக நெருங்கிய உறவுகள் மற்றும் நட்புகளுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்