20 years of Dhanush - எண்ணம் போல் வாழ்க்கை - தனுஷின் அனுபவ வார்த்தைகள்!

20 years of Dhanush - எண்ணம் போல் வாழ்க்கை - தனுஷின் அனுபவ வார்த்தைகள்!

20 ஆண்டுகாலம் நடிகர் தனுஷ் திரை வாழ்க்கையில் காலூன்றி நிற்பதை முன்னிட்டு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

ஒருவரை கேலி செய்வது என்பது இன்றும் நமது பண்பாட்டில் அழிக்க முடியாத ஒன்றாகவே திகழ்ந்து வருகிறது. இதில் தெருக்கோடியில் வசிக்கும் மனிதர்களில் இருந்து கோடிகளில் வாழும் மனிதர்கள் வரை யாவரும் விதிவிலக்கல்ல. குறிப்பாக துள்ளுவதோ இளமை என்ற துள்ளலில் கலை குடும்பத்தோடு அறிமுகமான நடிகர் தனுஷும் இதில் இருக்கிறார் என்பதும் எவரும் மறுக்க முடியாத உண்மை. ஒல்லியான உடல், பலத்த சத்தத்துடன் கூடிய வசன உச்சரிப்பு, தனது எடைக்கு மீறிய சண்டை நுட்பங்கள் என எல்லாவற்றிலும் தனது அதீத தன்மையை வெளிப்படுத்தியவர் தனுஷ். இது ஒப்பற்ற வடிவமைப்பு மற்றும் சமூக கட்டமைப்புகளுக்கு அப்பாற்பட்டு இருந்தாலும் சினிமா என்கிற கற்பனை உலகத்திலும் முதலில் பலருக்கும் பிடிக்காமலே  இருந்தது. 

ஆனால் ரஜினிகாந்தின் படத்தின் தலைப்பினை கொண்டு தன்னைத்தானே மெருகேற்றிக் கொண்டு வந்தவர் தனுஷ். இதற்கும் எதிர்ப்புகள் இருந்து கொண்டு தான் வந்தன. இப்படி பல போராட்டங்களுக்கு மத்தியில் தன்னை ஒரு கதாநாயகனாக மட்டுமில்லாமல், குணச்சித்திர கதாபாத்திரத்தையும் மிஞ்சும் அளவிற்கு தன்னுடைய கதாபாத்திர  குணாதிசயங்களை சினிமா நுட்பத்தில் பதித்துள்ளார். இவ்வாறான திரைப்பயணத்தில் தனுஷின் வெற்றிக்கு இணையாக போட்டிகளும் இருந்து கொண்டே வந்தன. இதற்கிடையில் குடும்பம், தாய் தந்தை, பெண் நடிகைகள் என பல்வேறு கோணங்களில் தனுஷின் வாழ்க்கை சர்ச்சைகள் அரங்கேறி வந்தாலும், தனக்கென தனி திரைக்கதை வழியையும் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தையும் சம்பாதித்து வரும் தனுஷ், தற்போது சினிமா என்னும் மாய உலகில் 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.

இதனை ஒட்டி பல்வேறு தரப்பிலிருந்தும் தனுஷிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் நடிகர் தனுஷ், "இந்தத் திரையுலகில் எனது பயணத்தைத் தொடங்கி இரண்டு தசாப்தங்கள் ஆகின்றன என்பதை என்னால் நம்ப முடியவில்லை. காலம் பறக்கிறது. துள்ளுவதோ இளமை தொடங்கும் போது நான் இவ்வளவு தூரம் வருவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை.  கடவுள் எனக்கு கருணை காட்டியுள்ளார்.தொடர் அன்பிற்கும் ஆதரவிற்கும் எனது ரசிகர்களுக்கு என்னால் நன்றி சொல்ல முடியாது. நீங்கள் எனது பலத்தின் தூண்கள். நான் உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன். உலகெங்கிலும் உள்ள சினிமா ஆர்வலர்கள் தங்கள் நிபந்தனையற்ற அன்பை என் மீது பொழிந்ததற்காக நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

அனைத்து ஆதரவுக்கும் பத்திரிக்கை, ஊடகங்கள், தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் சமூக ஊடக நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இன்றும் என்னுடன் பணியாற்றிய அனைத்து இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு நன்றி. மேலும் கேமராவுக்குப் பின்னால் பணியாற்றிய அனைத்து டெக்னீஷியன்களுக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். மேலும் எனது அற்புதமான சக நடிகர்கள். எனது அண்ணன் மற்றும் குரு செல்வராகவனுக்கு நன்றி. ஏன் என்று உங்கள் அனைவருக்கும் தெரியும்! என்னுள் இருக்கும் நடிகரை அடையாளம் காட்டிய எனது தந்தை கஸ்தூரி ராஜாவுக்கு நன்றி.

இறுதியாக நான் என் அம்மாவிற்கு நன்றி கூறுகிறேன்.  அவளுடைய அன்றாட பிரார்த்தனைகள் தான் என்னைப் பாதுகாத்து என்னை இவ்வளவு தூரம் கொண்டு வந்தன. அவள் இல்லாமல் நான் ஒன்றுமில்லை.மற்ற காரியங்களில் மும்முரமாக இருக்கும்போதுதான் வாழ்க்கை என்று எங்கோ படித்திருக்கிறேன். என்னால் ஒத்துக்கொள்ள முடியாது. இந்த ஒரு வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குவோம். அதை எண்ணிப்பார்ப்போம். எண்ணம் போல் வாழ்க்கை" எனத் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்