நம்ம எல்லார் வாழ்க்கையும் ஒரு நாள் நமக்கு பிடிச்ச மாதிரி மாறும் ”எனக்கு மாறிடுச்சு” - குஷியில் பிக்பாஸ் பிரபலம்

நம்ம எல்லார் வாழ்க்கையும் ஒரு நாள் நமக்கு பிடிச்ச மாதிரி மாறும் ”எனக்கு மாறிடுச்சு” - குஷியில் பிக்பாஸ் பிரபலம்

”நம்ம எல்லார் வாழ்க்கையும் ஒரு நாள் நமக்கு பிடிச்ச மாதிரி மாறும்” எனக்கு மாறிவிட்டது என பிக்பாஸ் பிரபலம் அனிதா சம்பத் தெரிவித்துள்ளார்.

உலகில் பிறந்த அனைவருக்குமே சொந்த வீடு வாங்குறது மிகப்பெரிய கனவுதான். அதையும் நமக்கு பிடிச்சமாதிரி பிடிச்சவங்களோட சேர்ந்து வாங்குன அத விட பெரிய சந்தோஷம் வேற எதும் இல்லை. அந்த வீடு வாங்குற கனவை தான் தற்போது நிறைவேற்றிவிட்டதாக நடிகையும், பிக்பாஸ் பிரபலமாக அனிதா சம்பத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து பதிவிட்டுள்ள அனிதா சம்பத் “ வீடு எப்போதுமே எங்க ரெண்டு பேருக்கும் மிக பெரிய கனவு. வாடகை வீட்டுலயே நல்ல வீடு கிடைக்காதா.. பெட்ரூம் வச்ச வீட்டுக்கு போக மாட்டோமானு ஏங்குன காலம் எல்லாம் இருக்கு.. ஓட்டு வீடுல பிறந்து வளர்ந்த பிரபாக்கும் அதே தான். இன்னக்கி எங்களுக்கு பிடிச்ச மாதிரி எங்களுக்காக ஒரு வீடு. நிறைய வலிகளும் நிறைய உழைப்பும் நிறைய மெனக்கெடல்களும் கடந்து அன்னையர் தினம் அன்று எங்கள் அன்னையர்களுக்காக அவர்களின் சொந்த வீட்டு கனவை நினைவாக்கி விட்டோம். “நம்ம எல்லார் வாழ்க்கையும் ஒரு நாள் நமக்கு பிடிச்ச மாதிரி மாறும்”. இப்ப அதை இன்னும் வலிமையா நம்புறேன். இதை படிக்கிற நீங்க எல்லாருமே சீக்கிரம் வீடு வாங்குவீங்க.எங்க சார்பா அதற்கான வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார். அனிதாவின் இந்த பதிவை பார்த்த இன்ஸ்டாகிராம்வாசிகள் பலரும் அவர்களுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தனியார் தொலைக்காட்சிகளில் செய்திவாசிப்பாளராக பணியாற்றியவர் அனிதா சம்பத். பின்னர் தனித்துவமான பேச்சாலும், கடின உழைப்பாலும் சினிமாவில் கால் பதித்து சிறு சிறு வேடங்களில் நடிகையாக நடித்து அனைவரின் கவனத்தையும் பெற்றவர். அதனைதொடர்ந்து தனியார் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று தனது திறமையை வெளிகாட்டினார். இதனையடுத்து நடைபெற்ற பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் அனிதா சம்பத் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Find Us Hereஇங்கே தேடவும்