மேடையில் மைக்கை தூக்கி எறிந்த பார்த்திபன்.... அதிர்ச்சியில் உறைந்த ஏ.ஆர்.ரகுமான்

மேடையில் மைக்கை தூக்கி எறிந்த பார்த்திபன்.... அதிர்ச்சியில் உறைந்த ஏ.ஆர்.ரகுமான்

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் முன்பு நடிகர் பார்த்திபன் மேடையில் இருந்து மைக்கை தூக்கி வீசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

ஒத்த செருப்பு படம் தேசிய விருதை பெற்றதையடுத்து நடிகர் பார்த்திபன் இரவில் நிழல்கள் என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார். இப்படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ஏ.ஆர்.ரகுமானுடன் இணைந்து மூன்று ஆஸ்கர் வின்னர்கள் பணியாற்றியுள்ளனர். 96 நிமிடங்களில் ஒரே ஷாட்டில் உருவான இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் இயக்குநர் சமுத்திரக்கனி, பாடலாசிரியர் மதன் கார்க்கி, ரோபோ சங்கர் உள்பட பலரும் கலந்து கொண்டனர். இரவில் நிழல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் மணிரத்னம் வெளியிட்டார். நிகழ்ச்சியில் மேடையில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு நினைவு பரிசாக அவரது தாய் மற்றும் தந்தை உருவப்படம் பதிக்கப்பட்ட இசைவடிவ கேடையத்தை நடிகர் பார்த்திபன் வழங்கினார்.

அதன் பின்னர் நிகழ்ச்சியின் ஒருபகுதியாக படம் குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் பார்த்திபன் ஆகியோர் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது பேசிய ரகுமான் படம் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் எடுத்திருந்தால் உலகம் முழுவதும் கொண்டாடியிருப்பார்கள். பரவாயில்லை நாம் தமிழ்நாட்டில் கொண்டாடலாம் என்றார். மேலும், தமிழ் திரைக்கலைஞர்களிடம் நிறைய திறமைகள் இருக்கின்றன. நாம் நினைத்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என தெரிவித்தார்.

இதனையடுத்து நடிகர் பார்த்திபன் பேசுகையில் திடீரென மைக் வேலை செய்யாலம் போனதால் கடும் கோபமடைந்த பார்த்திபன் மேடையில் இருந்து மைக்கை தூக்கி வீசினார். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மேடையில் இருந்த ஏ.ஆர்.ரகுமான் பார்த்திபனின் செயலை கண்டு பெரும் அதிர்ச்சியடைந்தார்.

அதன்பின்னர் இறுதியாக பேசிய பார்த்திபன் அங்கு நடந்த நிகழ்வுக்கு வருத்தம் தெரிவித்தார். நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டதாகவும், தனது அநாகரீகமான செயலுக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறினார். ஏ.ஆர்.ரகுமான் முன்பு நடிகர் பார்த்திபன் மைக்கை தூக்கி வீசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Find Us Hereஇங்கே தேடவும்