நடிகர் அஜீத் பிறந்தநாளுக்கு ஓபிஎஸ் மற்றும் அண்ணாமலை ட்விடரில் வாழ்த்து!

நடிகர் அஜீத் பிறந்தநாளுக்கு ஓபிஎஸ் மற்றும் அண்ணாமலை ட்விடரில் வாழ்த்து!

நடிகர்
அஜீத் பிறந்தநாளுக்கு ஓபிஎஸ் மற்றும் அண்ணாமலை ட்விடரில் வாழ்த்து!

 நடிகர்
அஜித் பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக., ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம், பாஜக.,
மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

 நடிகர்
அஜித்குமார் தன் 51வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவரின் பிறந்தநாளை ரசிகர்கள் மட்டுமின்றி
திரையுலகப் பிரபலங்களும் கொண்டாடி வருகின்றனர்.

 அதிமுக.,
ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம், தமிழக பாஜக., மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர்
அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

 ஓபிஎஸ்.,
தன் வாழ்த்துச் செய்தியில், உழைப்பின் மேன்மையை உலகிற்கு உணர்த்திய மே தின நாளன்று
பிறந்து, உழைப்பால் உயர்ந்து, பல கோடி ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்ட திரைப்பட
நடிகர் அஜித்குமார் அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

 அண்ணாமலை
தன் வாழ்த்து செய்தியில், பன்முகத் தன்மையும், தனக்கென்று தனி பாதையை தேர்ந்தெடுத்து
அதில் பயணம் செய்து கொண்டிருக்கும் நடிகர் அஜித் குமார் அவர்களுக்கு இனிய பிறந்த நாள்
வாழ்த்துக்கள், எல்லாம் வல்ல இறைவன் நல்ல ஆரோக்கியத்தையும் மன நிம்மதியையும் அவருக்கு
கொடுக்க வேண்டுகிறேன் என குறிப்பிட்டுள்ளார். 

Find Us Hereஇங்கே தேடவும்