”சமஸ்கிருதம் தான் தேசிய மொழி” - புது சர்ச்சையை கிளப்பிய கங்கனா ரணாவத்

”சமஸ்கிருதம் தான் தேசிய மொழி” - புது சர்ச்சையை கிளப்பிய கங்கனா ரணாவத்

தமிழ், கன்னடத்தை விட சமஸ்கிருதம் தான் பழமையான மொழி, அதுதான் இந்தியாவின் தேசிய மொழி என பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் புது சர்ச்சையை உண்டாக்கும் வகையில் பேசியுள்ளார்.

சமீபகாலத்தில் அரசியலிலும் சரி, சினிமாவிலும் சரி இந்தி மொழி பிரச்சனை தலைதூக்கி வருகிறது. இதற்கு பல்வேறு எதிர்ப்புகளும், ஆதரவும் மக்கள் மத்தியில் இருந்து எழுந்து வருகிறது. கடந்த மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழி கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆங்கிலத்திற்கு மாறாக அனைவரும் இந்தி மொழியை கற்க வேண்டும். இந்திதான் அனைத்து மாநிலத்திற்கும் மாற்று மொழியாக இருக்க வேண்டும் என்று கூறினார். அமித் ஷாவின் அக்கருத்துக்கு நாடு முழுவதும் கண்ட குரல் எழுந்தது. 

இதற்கிடையில் விக்ரம் ராணா பட புரமோஷன் விழாவில் கலந்து கொண்ட கன்னட நடிகர் கிச்சா சுதீப் பேசுகையில் “இந்தி இந்தியாவின் தேசிய மொழி கிடையாது. பாலிவுட் நட்சத்திரங்கள் பான் இந்தியா படங்களை எடுக்கிறார்கள், தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இருந்து டப் செய்கிறார்கள் என கூறி இருந்தார். இதற்கு பதில் அளித்த பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான் ” இந்தி நமது தேசிய மொழி இல்லை என்றால் நீங்கள் ஏன் கன்னட மொழி படங்களை இந்தி மொழியில் டப் செய்கிறீர்கள். இந்தி எப்போதும் இந்தியாவின் தாய்மொழி, அதுதான் இந்தியாவின் தேசிய மொழி என்று தெரிவித்தார். 

இந்நிலையில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கானுக்கு ஆதரவாக மற்றொரு பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் களமிறங்கியுள்ளார். தாகத் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கங்கனா “இந்தி நமது தேசிய மொழிதான் என்று நடிகர் அஜய் தேவ்கான் கூறியது சரிதான். இந்தியை தேசிய மொழியாக அங்கீகரிக்க மறுப்பது இந்திய அரசியலமைப்பிற்கு எதிரானது. இந்தியை விட தமிழ் பழமையானது. தமிழை விட சமஸ்கிருதம் மிக பழமையான மொழி. என்னை கேட்டால் சமஸ்சமஸ்கிருதம் தான் இந்தியாவின் தேசிய மொழியாக இருக்க வேண்டும். கன்னடம், தமிழ், தெலுங்கு, குஜராத்தி மற்றும் இந்தி போன்ற மொழிகள் எல்லாம் சமஸ்கிருதத்தில் இருந்து உருவானவை. மேலும், சமஸ்கிருதம் ஏன் இந்தியாவின் அலுவல் மொழியாக இல்லை என கேள்வி எழுப்பியுள்ளார். 

மொழி குறித்து பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்த கருத்திற்கு பலரும் தங்களது கண்டனகளை தெரிவித்து வருகின்றனர்.

Find Us Hereஇங்கே தேடவும்