அம்பேத்கருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டு கூறியது வருத்தமளிக்கிறது – அமீர் பேச்சு!

அம்பேத்கருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டு கூறியது வருத்தமளிக்கிறது – அமீர் பேச்சு!

அம்பேத்கருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டு கூறியது வருத்தமளிக்கிறது – அமீர் பேச்சு!

இசையமைப்பாளர் இளையராஜா பாஜக., வில் கூட இணையலாம் ஆனால், அம்பேத்கருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டு கூறியது வருத்தமளிக்கிறது என இயக்குனரும், நடிகருமான அமீர் கருத்து தெரிவித்துள்ளார். 

இளையராஜா இசையமைத்துள்ள அக்கா குருவி படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. அதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் அமீர், இளையராஜா பாஜக., வில் கூட இணையலாம். ஆனால், இந்த் அதேசத்தில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்திய அம்பேத்கருடன் பிரதமர் மோடியை கொஞ்சமும் தொடர்பில்லாமல் ஒப்பிட்டு கூறியது வருத்தமளிக்கிறது என்றார். 

அதற்காக இளையராஜாவை சாதிய ரீதியாக விமர்சனம் செய்வது அதை விட தவறானது. அதை நாம் அனுமதிக்கக் கூடாது. திரைப் பிரபலங்கள் மூலம், பாஜ., வையும், மோடியையௌம் விளம்பரம் செய்வது தான் அவர்களின் யுக்தி. 

இதில் இளையராஜாவைப் போல நம்முடைய திரைக்கலைஞர்கள் சிக்கி கொள்ளாமல் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். தங்களுக்கு அடையாளம் கொடுத்த மக்களின் பக்கம் நிற்பது தான் திரைக் கலைஞர்களுக்கான சமூக பொறுப்பு.

அதிகாரத்தின் பக்கம் துணை நிற்பதென்பது மக்களுக்கு செய்யும் துரோகம் இதை உணர்ந்து திரைக்கலைஞர்கள் செயல்பட வேண்டும் என்றார்.

Find Us Hereஇங்கே தேடவும்