'இதுபோன்ற திரைப்படங்கள் தமிழில் ஏன் வருவதில்லை' - இளையராஜா

'இதுபோன்ற திரைப்படங்கள் தமிழில் ஏன் வருவதில்லை' - இளையராஜா

'சில்ட்ரன் ஆஃப் ஹெவன்' போன்ற திரைப்படங்கள் தமிழில் ஏன் வருவதில்லை என எண்ணியதாக இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.

ஈரானிய மொழியில் 1997ம் ஆண்டு வெளியாகி வெற்றியடைந்த திரைப்படம் 'சில்ட்ரன் ஆஃப் ஹெவன்'. தற்போது இந்த படத்தை 'அக்கா குருவி' என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்துள்ளார் இயக்குநர் சாமி.' அக்கா குருவி' திரைப்படம் மே 6ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படம் குறித்து இளையராஜா பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். 'சில்ட்ரன் ஆஃப் ஹெவன்' படம் தனக்கு வியப்பை ஏற்படுத்தியது. அந்த படத்தைப் பார்த்த பிறகு இது போன்ற திரைப்படங்கள் ஏன் இங்கு வருவதில்லை என்ற எண்ணம் தோன்றியது எனக் கூறியுள்ளார்.

மேலும் அவர், 'சில்ட்ரன் ஆஃப் 'ஹெவன்' படத்தின் சாராம்சம் மாறாமல், நமது கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு மிகவும் சுவாரஸ்யமாக சாமி இயக்கியிருக்கிறார் எனவும் இளையராஜா தெரிவித்துள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்