பாடகி லதா மங்கேஷ்கர் உடல்நிலையில் முன்னேற்றம்!

பாடகி லதா மங்கேஷ்கர் உடல்நிலையில் முன்னேற்றம்!
பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனா பாதிப்பு காரணமாக மும்பை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது அவர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
92 வயதான லதா மங்கேஷ்கர் லேசான அறிகுறிகளுடன் கொரோனா உறுதி செய்யப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அவர் அனுமதிக்கப்பட்டு இரண்டு வாரங்கள் ஆகியுள்ள நிலையில், அவரின் உடல்நிலை குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது தொடர்பாக லதா மங்கேஷ்கரின் நெருங்கிய நண்பர் அனுஷா ஸ்ரீனிவாசன் கூறுகையில், லதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மருத்துவர் பிரதித் சமதானி தலைமையிலான குழுவினர் லதா மங்கேஷ்கருக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும், விரைவில் அவர் வீடு திரும்புவார் என்றும் எதிர்பார்ப்பதாக அவரின் குடும்பத்தார் தெரிவித்தனர்.