கைதி ஹிந்தி ரீ-மேக்கில் ஹீரோ இவர்தான் : வெளியான அசத்தல் அப்டேட்

கைதி ஹிந்தி ரீ-மேக்கில் ஹீரோ இவர்தான் : வெளியான அசத்தல் அப்டேட்

கைதி திரைப்படத்தின் ஹிந்தி ரீ-மேக் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். கார்த்தி நடிப்பில் உருவான இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பெற்றது.

இதனால் பல மொழிகளில் இந்த திரைப்படம் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கைதி திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இந்த படத்திற்கு போலா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் யார் நடிக்கவுள்ளார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே இருந்தது. இந்நிலையில் தற்போது அந்த கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கான் நடிக்கவுள்ளார். 

இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் மற்றும் அஜய் தேவ்கானின் ஃபிலிம்ஸுடன் இணைந்து தயாரிக்கிறது. மேலும் தர்மேந்திரா சர்மா இந்த படத்தை இயக்குகிறார்.

Find Us Hereஇங்கே தேடவும்