விவாகரத்துதான் சிறந்த முடிவு! - மனம்திறந்த நாகசைதன்யா!

விவாகரத்துதான் சிறந்த முடிவு! - மனம்திறந்த நாகசைதன்யா!

விவாகரத்துதான் எங்களுக்கான சிறந்த முடிவு என சமந்தாவுடனான திருமண முறிவு குறித்து நடிகர் நாகசைதன்யா தெரிவித்துள்ளார்.

நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சமந்தா இருவருமே கடந்த சில மாதங்களுக்கு முன்பு தங்களுடைய திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டதாக அறிவித்தனர்.  இது திரையுலக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இது குறித்து சமூக வலைதளங்களில் பெரிதும் விவாதிக்கப்பட்டது. இந்நிலையில், சமீபத்தில் நாகசைதன்யா தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சமந்தாவுடன் திருமண முறிவு குறித்து பேசியுள்ளார்.

அதில், "பிரிந்து இருப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. எங்கள் தனிப்பட்ட மகிழ்ச்சிக்காக நாங்கள் இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு அது. அதில் சமந்தா மகிழ்ச்சியாக இருந்தால். எனக்கும் மகிழ்ச்சி தான். இதுபோன்ற ஒரு சூழலில் விவாகரத்து தான் சிறந்த முடிவாக எங்களுக்கு இருந்தது" என கூறி தெரிவித்துள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்