புரியாத நகைச்சுவைக்காக மன்னியுங்கள் - நடிகர் சித்தார்த்

புரியாத நகைச்சுவைக்காக மன்னியுங்கள் - நடிகர் சித்தார்த்

சரியாக புரிந்து கொள்ளப்படாத எனது நகைச்சுவைக்கு மன்னியுங்கள் என  சித்தார்த் சாய்னா நேவாலிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

பஞ்சாப்பில் பிரதமர் மோடியின் பாதுகாப்பு குறைபாடு குறித்த சாய்னாவின் பதிவுக்கு, சித்தார்த் சர்ச்சை ட்வீட் செய்திருந்ததை தொடர்ந்து தற்போது 

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலிடம் மன்னிப்பு கோரியுள்ளார் நடிகர் சித்தார்த். 

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "சில நாட்களுக்கு முன்பு உங்கள் ட்வீட் ஒன்றிற்கு நான் அளித்த மூர்க்கத்தனமான நகைச்சுவைக்காக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். நான் பல விஷயங்களில் உங்களுடன் உடன்படாமல் இருக்கலாம். ஆனால் உங்கள் ட்வீட்டைப் படிக்கும் போது எனக்கு ஏற்பட்ட ஏமாற்றம் அல்லது கோபம் கூட எனது தொனியையும் வார்த்தைகளையும் நியாயப்படுத்த முடியாது. என்னால் அதை விடச் சிறப்பாகப் பேச முடியும் என்பதை நான் அறிவேன். எந்தவொரு ஜோக்கையும் விளக்க வேண்டும் என்றால், அது ஒரு நல்ல ஜோக் இல்லை என்ற சொற்சொடர் உள்ளது. எனவே, அந்த ஜோக்கிற்கு என்னை மன்னிக்கவும்" என கூறியுள்ளார்.

மேலும் அவர், "எனது ட்வீட் வார்த்தை விளையாட்டு மற்றும் நகைச்சுவையானது மட்டுமே. அதற்கு அனைத்து தரப்பினரும் கூறும் வகையிலான உள்நோக்கம் எதுவும் கொண்டிருக்கவில்லை என்பதை நான் கூறிக்கொள்கிறேன். நான் எப்போதும் பெண்ணியவாதிகள் பக்கம் இருப்பவன். ஒரு பெண்ணாக உங்களைத் தாக்கும் நோக்கம் நிச்சயமாக எனக்கு இல்லை என்றும் நான் உறுதியளிக்கிறேன். எனவே, இத்துடன் இந்த விஷயத்தை நாம் விட்டுவிடலாம் என நம்புகிறேன். நீங்கள் எனது கடிதத்தை ஏற்றுக்கொள்வீர்கள் என்றும் எதிர்பார்க்கிறேன். நீங்கள் எப்போதும் என் சாம்பியனாக இருப்பீர்கள்" எனவும் தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்