"கொரோனா ஏழையை பிச்சைக்காரனாக மாற்றும்" – வைரலாகும் விஜய் ஆண்டனி ட்வீட்...!

கொரோனா பணக்காரனை பெரிய பணக்காரனாகவும் ஏழையை பிச்சைக்காரனாக மாற்றும் என நடிகர்-இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் ட்விட் தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகங்களை கொண்டவர் விஜய் ஆண்டனி. 

தமிழகத்தில் கொரோனா பரவல் மற்றும் உருமாறிய ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதால் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை  வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், "கொரோனா பணக்காரனை பெரிய பணக்காரனாகவும் ஏழையை பிச்சைக்காரனாகவும் மாற்றும். எவனாவது ஹிரோஷிமா நாகசாகில போட்ட மாதிரி, உலகத்தை ஒரேடியா பாம் போட்டு அழிசுட்டா நல்லா இருக்கும். வாழ்க வளமுடன்" என பதிவிட்டுள்ளார்.

இவரது இந்த ட்வீட்டை பலர் ரீட்வீட் செய்து தங்களது அதிர்ச்சி கலந்த கம்மெண்ட்களை தெரிவித்து வருகின்றனர்.

Find Us Hereஇங்கே தேடவும்