"டாக்டர்" பட்டம் பெற்ற நடிகர் சிம்பு..!

வேல்ஸ் பல்கலைகழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் நடிகர் சிம்புவிற்கு  ‘கவுரவ டாக்டர்’ பட்டம் வழங்கப்பட்டது.

வேல்ஸ் பல்கலைகழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் ஆண்டுதோறும் கலைத்துறையில் சாதனைப் படைத்தவர்களுக்கு “கவுரவ டாக்டர்” பட்டத்தினை வழங்கி வருகிறது. அதன்படி இந்த ஆண்டு நடிகர் சிம்புவிற்கு  ‘கவுரவ டாக்டர்’ பட்டம் வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், வேல்ஸ் பல்கலைகழகத்தில் இன்று(ஜன.11) பட்டமாளிப்பு விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்ட நடிகர் சிம்புவிற்கு  “கவுரவ டாக்டர்” பட்டம் வழங்கப்படவுள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இது குறித்து, வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனரும், வேந்தருமான ஐசரி கே.கணேஷ் கூறியதாவது: "ஆறு மாதக் குழந்தையாக இருக்கும்போதே திரைத்துறையில் நடிக்க வந்தவர் சிலம்பரசன். விரைவில் அவருக்கு 39 வயது ஆகப்போகிறது. ஒருவரின் வயதும், அவரின் தொழிலும் ஒரே ஆண்டாக அமைவது அபூர்வம். அப்படியொரு ஆசிர்வதிக்கப்பட்ட கலைஞன்தான் சிலம்பரசன்.

நடிப்பு, இயக்கம், இசை, பாடகர் என சினிமாவில் பல்வேறு துறைகளிலும் இப்போதுவரை சாதனை படைத்து வரும் அவரின் சாதனையைக் கவுரவிப்பதன் பொருட்டே இந்த கவுரவ டாக்டர் என்கிற அங்கீகாரம். அதை எங்கள் வேல்ஸ் பல்கலைக்கழகம் வழங்குவதில் எங்களுக்குக் கூடுதல் மகிழ்ச்சி” என கூறியுள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்