விவசாயிகளுக்கான படம் கோடீஸ்வரன்.!

விவசாயிகளுக்கான படம் கோடீஸ்வரன்.!

முண்டாசுப்பட்டி, மம்பட்டியான், பேட்டை, ஜாங்கோ போன்ற படங்களில் நடித்துள்ளவர் ஆதேஷ்பாலா. இவர் கோடீஸ்வரன் என்கிற குறும்படத்தில் நடித்துள்ளார். 

இந்த குறும்படத்தில் கலைச்செல்வன் மற்றும் பலர் நடித்துள்ளனர். பொங்கல் தினத்தில் வெளியாக உள்ல இந்த குறும்படத்தில் ஆதேஷ்பாலா முதன் முறையாக வயதான தோற்றத்தில் நடித்துள்ளார்.

இந்த குறும்படம் குறித்து ஆதேஷ்பாலா கூறுகையில், “இதுவரை யாரும் காணாத விவசாயிகளின் மறுபக்கத்தையும் அவர்களின் மகிழ்ச்சியான வாழ்க்கை முறையையும் இக்குறும்படத்தில் வாயிலாக பதிவு செய்திருக்கிறோம். என்று தெரிவித்துள்ளார்.

மேலும் நானும் எனது படக்குழுவினரும் இக் குறும்படத்தை, கலை மூவிஸ் சார்பாக விவசாயிகளுக்காக சமர்ப்பிக்கின்றோம் என்று அவர் கூறியுள்ளார். 

இந்த குறும்படத்திற்கு காஞ்சனா, சதுரங்கவெட்டை-2    போன்ற படங்களுக்கு இசை அமைத்த அஷ்வமித்ரா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Find Us Hereஇங்கே தேடவும்