நடிகை ஷோபனாவுக்கு ஒமைக்ரான் தொற்று : ஷாக்கில் ரசிகர்கள்

நடிகை ஷோபனாவுக்கு ஒமைக்ரான் தொற்று : ஷாக்கில் ரசிகர்கள்

நடிகை ஷோபனாவுக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் திருப்பு வகையான ஒமிக்ரான் தொற்று அதிவேகத்தில் பரவி வருகிறது. இதனால் மத்திய மாநில அரசுகள் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நடிகை ஷோபனாவுக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தனது இணையப்பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர்  வெளியிட்டுள்ள பதிவில், “எல்லாம் பாதுகாப்பு நடைமுறைகளையிம் மேற்கொண்டும் எனக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டது. எனக்கு மூட்டுகளில் வலி ஏற்பட்டது. தொண்டையில் கரகரப்பு இருந்தது. பின்னர் தொண்டை கரகரப்பு இருந்தது. பின்னர் தொண்டை புண்ணாக மாறியது.

ஆனால் அது முதல் நாள் மட்டும்தான். பின்னர் எனது அறிகுறீகள் மெல்ல குறையத் தொடங்கின. நான் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் அது என்னை நோய் பாதிப்பில் இருந்து பாதுகாத்துள்ளது. அதனால் எல்லோரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கல் என்று கேட்டுக்கொள்கிறேன் “ என்று தெரிவித்துள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்