கணவரின் மறைவிற்கு பின் மீண்டும் நடிக்க வந்த மேக்னா ராஜ்?

கணவரின் மறைவிற்கு பின் மீண்டும் நடிக்க வந்த மேக்னா ராஜ்?

கணவரின் மறைவிற்கு பிறகு மேக்னா ராஜ் மீண்டும் நடிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை மேக்னா தமிழில் காதல் சொல்ல வந்தேன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இவரும் அவரது கணவரும் நடிகர் சிரஞ்சீவி சர்ஜா நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்தவர்கள். 

ஆனால் எதிர்பாராத விதமாக கடந்த 2020 ஆம் ஆண்டு சிரஞ்சீவி சார்ஜர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அப்போது கர்ப்பிணியாக இருந்த நடிகை மேக்னா ராஜ், அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். 

அதன்பின்னர், அவர் மீண்டும் நடிக வருவதாக தகவல் வெளியானது. இந்நிலையில், திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்காமல் இருந்த நடிகை மேக்னா ராஜ் மீண்டும் நடிக்க வந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

கன்னடத்தில் உருவாக்கி வரும் ஒரு படத்தில் நடிகை மேக்னா ராஜ் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

Find Us Hereஇங்கே தேடவும்