பெரிய நடிகர்களிடம் நிதியுதவி கேட்பதற்கு தர்ம சங்கடமாக இருக்கிறது – ஆர்.கே.செல்வமணி

பெரிய நடிகர்களிடம் நிதியுதவி கேட்பதற்கு தர்ம சங்கடமாக இருக்கிறது – ஆர்.கே.செல்வமணி

பெரிய நடிகர்களிடம் நிதியுதவி கேட்பதற்கு தர்ம சங்கடமாக இருக்கிறது – ஆர்.கே.செல்வமணி 

பெப்சி தொழிலாளர்களுக்கு 40 முதல் 50 சதவீதம் வரை ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது என, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.

சென்னை வடபழனியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், படப்பிடிப்பில் பெப்சி தொழிலாளர்கள் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

மேலும், பெப்சி தொழிலாளர்களுக்கு 40 முதல் 50 சதவீதம் வரை ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், வரும் தை மாதம் முதல் இது அமலுக்கு வரும் என்றும் கூறினார். 

டிசம்பர் மாதம் முதல் திரைப்படத் தொழில் சீரடைந்து வந்தது என்றும், வலிமை ஆர்.ஆர்.ஆர். திரைப்படங்கள் தியேட்டர்களில் வெளியிடப்பட்டிருந்தால், நிலைமை மேலும் சீராகி இருக்கும் என்ற அவர், பெரிய நடிகர்களிடம் மீண்டும் மீண்டும் சம்மேளன ஊழியர்களுக்காக நிதியுதவி கேட்பதற்கு தர்ம சங்கடமாக இருக்கிறது என்றார்.

Find Us Hereஇங்கே தேடவும்