அஜித்தின் 61-வது படத்தின் இசையமைப்பாளர் இவர்தான்? குஷியில் ரசிகர்கள்

அஜித்தின் 61-வது படத்தின் இசையமைப்பாளர் இவர்தான்? குஷியில் ரசிகர்கள்

நடிகர் அஜித்தின் 61-வது படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கவுள்ளாதாக என தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித் எச்.வினோத் இயக்கத்தில் நடித்துள்ள படம் வலிமை. இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். இப்படத்தில் ஹுமா குரேஷி நாயகியாகவும் கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஆனால், இப்படத்தின் பிஜிஎம் ஜிப்ரான் இசையமைத்தது என கூறப்படுகிறது. இதன்மூலம் தீரன் படத்திற்கு பின் மீண்டும் எச்.வினோத்துடன் கைகோர்த்துள்ளார் ஜிப்ரான்.

இப்படம் ஜனவரி 13-ம் தேதி வெளியாகவிருந்தது. ஆனால், கொரோனா தொற்று காரணமாக தேதி அறிவிக்காமல் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், அஜித்தின் 61-வது படத்திற்கு ஜிப்ரான் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Find Us Hereஇங்கே தேடவும்