ஒமைக்ரானை லேசாக கருதுவது தவறானது - உலக சுகாதார அமைப்பு

ஒமைக்ரானை லேசாக கருதுவது தவறானது - உலக சுகாதார அமைப்பு..!

ஒமைக்ரான் லேசான மாறுபாடு அல்ல என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார். 

உலகம் முழுவதும் ஒமைக்ரான் தொற்று பரவி வருகிறது. இந்தியாவிலும் இந்த வகை கொரோனா மாறுபாடு பரவியுள்ளது. ஒமைக்ரான் பரவல் குறித்து பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம், ஒமைக்ரான் வகை கொரோனா மாறுபாடு லேசான மாறுபாடு அல்ல. 

ஒமைக்ரான் மாறுபாட்டின் SARS-COV2 வைரஸ் மிகவும் பரவக்கூடிய வகை வைரஸ் என்பதால் பல நாடுகளில் இறப்புகள் பதிவாகியுள்ளன. எனவே, புதிய வகை மாறுபாட்டை லேசானதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என உலக நாடுகளுக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்