அஸ்வின் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு!

அஸ்வின் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு!
அஸ்வின் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு!

அஸ்வின் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு!

அஸ்வின்

கதாநாயகனாக நடிக்கும் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு!

தனியார் தொலைக்காட்சியின் சமையல் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்

அஸ்வின் குமார். என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

கதாநாயகியாக அவந்திகா, புகழ் ஆகிய பிரபலங்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை ஹரிஹரன்

இயக்கியிருக்கிறார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அஸ்வின் குமார் பேசியது

சர்ச்சைக்குள்ளானது. அதன் பின் அஸ்வின் அதற்காக வருத்தம் தெரிவித்து வீடியோ ஒன்றையும்

வெளியிட்டார்.என்ன சொல்லப் போகிறாய் படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு

வெளியாகும் என்று அறிவித்த நிலையில், இத்திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக

படத்தின் இயக்குனர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

தொழில்நுட்ப காரணங்களால் இத்திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டதாக

கூறப்பட்ட நிலையில், வரும் ஜனவரி 2022ல் வெளியாகும் என படத்தின் இயக்குனர் ஹரிஹரன்

டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் நல்ல விஷயங்கள் நடக்க காலமெடுக்கும்  என்ன சொல்ல போகிறாய் படம் எனக்கு ஏற்பட்ட சிறந்த

விஷயம் . அது வெளியாக கொஞ்சம் காலம் எடுக்கிறது. 2022 ஜனவரியில் திரையரங்கில் சந்திப்போம்

என குறிப்பிட்டுள்ளார். 

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com