மீரா மிதுன் மீது இயக்குனர் புகார்

மீரா மிதுன் மீது இயக்குனர் புகார்
மீரா மிதுன் மீது இயக்குனர் புகார்

மீரா மிதுன் மீது இயக்குனர் புகார்

மீரா

மிதுன் மீது இயக்குனர் புகார்

நடிகையும் மாடல் அழகியுமான மீரா மிதுன் பல சர்ச்சைகளில் சிக்கினார்.

பல முன்னணி நடிகர்கள் மீது சமூக வலைதளங்களில் அவதூறாகப் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

தொடர்ந்து பட்டியல் பிரிவு மக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதால் கைது செய்யப்பட்டார்

மீரா.

இந்நிலையில், மீரா சிறையில் இருந்து வெளிவந்த பின், ‘பேய

காணோம்’ என்ற புதிய படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில அவர் முக்கிய வேடத்தில்

நடிக்கிறார்.

படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்து

கொண்டிருந்த நிலையில், மீரா திடீரென தலைமறைவாகி விட்டதாக படத்தின் இயக்குனர் செல்வ

அன்பரசன் குற்றம் சாட்டியுள்ளார்.

மீரா மிதுனுடன் வந்த ஆறு உதவியாளர்களையும் காணவில்லை எனவும்,

அவர்கள் தங்கியிருந்த ஓட்டல் அறையில் இருந்த பொருட்களை எடுத்துச் சென்றுள்ளதாகவும்

அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இன்னும் இரண்டு நாட்களே வேலை பாக்கி உள்ள நிலையில், மீரா

தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்திவிட்டார் என்றும், அவர் மீது திரையுலகின்

அனைத்து அமைப்புகளிலும் புகார் அளிக்கப் போவதாகவும் அன்பரசன் கூறியுள்ளார்.  

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com