காதலன் மீது போலீசில் பிக் பாஸ் ஜூலி பரபரப்பு புகார்...

காதலன் மீது போலீசில் பிக் பாஸ் ஜூலி பரபரப்பு புகார்...

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஜூலி. மெரினா கடற்கரையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்.

திருமணம் செய்து கொள்வதாக கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக காதலன் மீது பிக் பாஸ் ஜூலி போலீசில் புகார் அளித்துள்ளார்.

பரங்கிமலையை சேர்ந்த மரியா ஜூலியானா தந்த புகாரில் அமைந்தகரையை சேர்ந்த காதலன் மனிஷிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

4 ஆண்டுகளாக காதலித்த மனிஷ் திருமணம் செய்வதாக கூறியதால் ரூ.2.30 லட்சம் வரை செலவு செய்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்