சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் அப்டேட்

சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் அப்டேட்

'வெந்து தணிந்தது காடு' படத்தின் டீசர் அடுத்தவாரம் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சிம்பு - கெளதம் மேனனின் கூட்டணியில் 'விண்ணைத்தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' ஆகிய படங்களுக்கு பின்னர் மூன்றாவதாக 'வெந்து தணிந்தது காடு' படத்தில் மீண்டும் இணைந்தனர்.

இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு மும்பையில் கடந்த மாதம் நிறைவடைந்தது. இந்த படம் எழுத்தாளர் ஜெயமோகன் திரைக்கதையில் உருவாகி உள்ளது.

மேலும் இதில் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மானும் பாடல் ஆசிரியராக தாமரையும் இணைந்துள்ளார்கள். இப்படத்தில் சிம்பு தனது உடல் எடை மெலிந்து நடித்துள்ளார்.

இந்த நிலையில், 'வெந்து தணிந்தது காடு' படத்தின் டீசர் அடுத்தவாரம் வெளியாகவுள்ளது என்றும் படத்தை வரும் மார்ச் மாதம் திரையிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Find Us Hereஇங்கே தேடவும்