அடுத்த படமும் நாம் சேர்ந்து பண்ணுவோம் - வினோதிடம் கூறிய அஜித்

அடுத்த படமும் நாம் சேர்ந்து பண்ணுவோம் -  வினோதிடம் கூறிய அஜித்

வலிமை படத்தை பார்த்த அஜித் அடுத்த படமும் நாம் சேர்ந்து பண்ணுவோம் என்று எச். வினோதிடம் கூறியுள்ளார்.

எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் வலிமை திரைப்படம் 2022ஆம் ஆண்டு பொங்கள் பண்டிகை அன்று தியேட்டர்களில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் வலிமை படத்தை அடுத்து வேறு ஒரு இயக்குநர் திரைப்படத்தில் நடிக்க முடிவு செய்திருந்துள்ளார் அஜித். 

இதனையடுத்து வலிமையில் அதிகமான சேஸிங் காட்சிகள் இருப்பதால் அதை பார்க்கும் ஆவலில் தான் நடித்த வலிமை படத்தை போட்டு காட்ட முடியுமா என்று எச். வினோதிடம் கேட்டுள்ளார் அஜித். 

இதனால் அஜித் வீட்டில் இருக்கும் ஹோம் தியேட்டரில் படத்தை போட்டுக்காட்டியுள்ளார் வினோத். படத்தை பார்த்த அஜித் அடுத்த படமும் நாம் சேர்ந்து பண்ணுவோம் என்று வினோதிடம் கூறியுள்ளார்.

இதனிடையே வலிமை படத்தின் அம்மா- மகன் செண்டிமெண்ட் பாடல் டி.ச. 5-ம் நாள் மாலை 6.30 மணிக்கு வெளியாகயிருக்கிறது.

Find Us Hereஇங்கே தேடவும்