‘நாட்டிலேயே மிகவும் சக்தி வாய்ந்த பெண் நான்தான்’ - நடிகை கங்கனா ரனாவத்

‘நாட்டிலேயே மிகவும் சக்தி வாய்ந்த பெண் நான்தான்’ - நடிகை கங்கனா ரனாவத்

நடிகை கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘நாட்டிலேயே மிகவும் சக்தி வாய்ந்த பெண் நான்தான்’ என்று பதிவிட்டுள்ளார்.

பிரபல ஹிந்தி நடிகை கங்கனா ரனாவத் சமீபகாலத்தில் தனது சமூக வலைதள பக்கத்தில் வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டது குறித்து, ‘இது துக்ககரமான, வெட்கக்கேடானது; தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் இல்லாமல், தெருக்களில் இருப்பவர்கள் சட்டங்களை இயற்ற ஆரம்பித்துவிட்டார்கள் என்றால், இதுவும் ஜிஹாதி நாடு தான்’ என்று பதிவிட்டிருந்தார்.

இதனையடுத்து சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் போலீசில் புகார் அளித்ததால் நடிகை கங்கனா ரனாவத் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் கங்கனாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதிக்காமல் இருந்திட கங்கனாவின் சமூக வலைதள பதிவுகளை தணிக்கை செய்து வெளியிட வேண்டும். விவசாயிகள் போராட்டம் குறித்து சர்ச்சை கருத்து கூறிய அவர் மீது அடுத்த ஆறு மாதங்களுக்குள் குற்றப்பத்திரிகை பதிவு செய்ய வேண்டும்’ என்று கூறப்பட்டது. 

இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘ஹ... ஹா... ஹா... நாட்டிலேயே மிகவும் சக்தி வாய்ந்த பெண் நான்தான்’ என்று பதிவிட்டு அதில் கிரீடம் இமோஜியையும் சேர்த்துள்ளார். இதனால் தற்போது இவர் புதிய  சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்