மூணாறு நிலப்பரப்பின் அரசியலை படமாக்கும் பா. ரஞ்சித்

மூணாறு நிலப்பரப்பின் அரசியலை படமாக்கும் பா. ரஞ்சித்

மூணாறு நிலப்பரப்பின் அரசியலை பதிவு செய்யும் படமாக ‘ரெபெல்’ இருக்கும் என இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் ‘பேச்சிலர்’, ‘ஜெயில்’ ஆகிய படங்கள் வெளியாகவுள்ள நிலையில் அடுத்ததாக ‘ரெபெல்’ திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த திரைப்படத்தின் துவக்க விழா சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், நலன் குமாரசாமி, தயாரிப்பாளர்கள் ஞானவேல் ராஜா, சி.வி. குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து இயக்குனர் பா.ரஞ்சித் பேசுகையில், மூணாறு பகுதி மற்றும் அங்குள்ள மக்களின் அரசியலை தான் தொடர்ந்து கவனித்து வருவதாகவும் அதனால் அதனை பதிவு செய்ய உள்ள ‘ரெபெல்’ திரைப்படம் தமிழ் சினிமாவில் முக்கியமானதாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

Find Us Hereஇங்கே தேடவும்