கண்மணி அன்போடு காதலன் .. இணையத்தில் வைரலாகும் நயன்-விக்னேஷ் சிவன் போட்டோக்கள்!!!

கண்மணி அன்போடு காதலன் .. இணையத்தில் வைரலாகும் நயன்-விக்னேஷ் சிவன் போட்டோக்கள்!!!

கத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நயன்தாரா தனது சொந்த குரலில் டப்பிங் செய்யும் போட்டோக்களை தனது இணையப்பக்கத்தில் விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளார்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா, சமந்தா விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இந்த படத்தின் முதல் இரண்டு பாடல்கள், இந்த படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா ஆகியோர் நடிக்கும் கதாபாத்திரங்களின் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டது. 

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் தற்போதுஇ டப்பிங் வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு நயன்தாரா தனது சொந்த குரலில் டப்பிங் செய்து வருகிறார்.

இது குறித்து தனது இணையப்பக்கத்தில் விக்னேஷ் சிவன்; கண்மணி அன்போடு காதலன் நான் எழுதிய வசனத்தை சொந்த குரலில் பேசுவது மிகுந்த சந்தோசம் என குறிப்பிட்டு டப்பிங் போட்டோகளை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.

Find Us Hereஇங்கே தேடவும்