தந்தை தயாரிப்பில் நடிக்கவுள்ள கீர்த்தி சுரேஷ்

தந்தை தயாரிப்பில் நடிக்கவுள்ள கீர்த்தி சுரேஷ்

தன் தந்தை தயாரிப்பில், தனது பள்ளிக் கால நண்பர் இயக்கத்தில் டொவினோவுடன் கதாநாயகியாக நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தற்போது இவர் தெலுங்கில் 'சர்க்கார் வாரி பாட்டா', குட்லக் சகி' ஆகிய படங்களிலும் தமிழில் 'சாணி காயிதம்' என்ற படத்திலும் நடித்து வருகிறார். மேலும் இவர் நடிப்பில் ’மரைக்காயர்’ படம் சில தினங்களில் திரைக்கு வரவுள்ளது. 

இந்த நிலையில் 'வாஷி' என்கிற மலையாள படத்தில் கீர்த்தி சுரேஷ் கமிட் ஆகி இருக்கிறார். இதில் கீர்த்தி சுரேஷுடன் மலையாளத்தின் முன்னனி கதாநாயகனாக வளர்ந்துள்ள டொவினோ தாமஸ் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்தை கீர்த்தி சுரேஷின் தந்தை தயாரிக்கிறார். மேலும், இந்த படத்தினை கீர்த்தி சுரேஷின் பள்ளிக் கால நண்பர் விஷ்ணு ஜி ராகவ் எழுதி இயக்கவுள்ளார். 

படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்டுள்ள நிலையில், புகைப்படங்களை கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர், நீங்கள் நினைப்பதை விட என் இதயத்திற்கு நெருக்கமான ஒரு படம் இது. ஒரு மகளாக தனது தந்தையின் தயாரிப்பில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை எனக்கு இருந்தது. தந்தைதானே, வாய்ப்பு எளிதாக அமைந்துவிடும் என உங்களில் பலர் நினைக்கலாம். ஆனால் அப்படி சாதாரணமாக இந்த வாய்ப்பு அமையவில்லை. ஏறக்குறைய ஏழு வருடங்களுக்கு பிறகு எனது கனவு இப்போது தான் நனவாகி உள்ளது. 'வாஷி படத்தை அறிமுகம் செய்கிறோம்' என குறிப்பிட்டுள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்