மாரி செல்வராஜ் படத்தில் வடிவேலு?

மாரி செல்வராஜ் படத்தில் வடிவேலு?

இயக்குனர் மாரி செல்வராஜ் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய இரண்டு வெற்றி படங்களை வழங்கிய மாரி செல்வராஜ் அடுத்து துருவ்  விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார்.

இதை அடுத்த தனது 4-வது படத்திற்காக உதயநிதியுடன் மாரி செல்வராஜ் கைகோர்ப்பதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், உதயநிதி-மாரிசெல்வராஜ் இணையும் படத்தில் நடிகர் வடிவேலு நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த படத்தில் தற்போது வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

சமீபத்தில் தயாரிப்பாளர்களுடன் ஏற்பட்டிருந்த பிரச்சினைகளை தீர்த்துக் கொண்ட நடிகர் வடிவேலு, தற்போது புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Find Us Hereஇங்கே தேடவும்