புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் - மத்திய அரசு

புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் - எச்சரிக்கும் மத்திய அரசு..!

ஒரு சில நாடுகளில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது என மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று ஒரு சில நாடுகளில் பரவி வருவதாக மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. அதில், "தென் ஆப்பிரிக்கா, ஹாங்காங், போட்ஸ்வானா உள்ளிட்ட நாடுகளில் புதிய வகை கொரோனா வைரஸான பி.1.1.529 பரவி வருகிறது. அந்த நாடுகளில் இருந்து வரும் பயணிகளை மிக தீவிரமாக கண்காணித்து சோதனைக்கு உட்படுத்த வேண்டும். அதே நேரத்தில் அந்நாடுகளில் இருந்து வரும் பயணிகளுடன் தொடர்பில் இருந்தவரையும் கண்டறிந்து சோதனைக்கு உட்படுத்த வேண்டும்" என குறிப்பிட்டுள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்