சீக்கியர்கள் குறித்த சர்ச்சை விவகாரம்; நடிகை கங்கனாவுக்கு சம்மன்!

சீக்கியர்கள் குறித்த சர்ச்சை விவகாரம்; நடிகை கங்கனாவுக்கு சம்மன்!

சீக்கியர்கள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த நடிகை கங்கனா ரனாவத்துக்கு டெல்லி சட்டமன்றக்குழு சம்மன் அனுப்பி உள்ளது.

சீக்கியர்கள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த நடிகை கங்கனா ரனாவத்துக்கு டெல்லி சட்டமன்றக்குழு சம்மன் அனுப்பி உள்ள நிலையில், டிச.6ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

சீக்கியர்கள் குறித்து சர்ச்சை கருத்தை வெளியிட்டதாக சீக்கிய தலைவர்கள் நடிகை கங்கனா ரனாவத் மீது புகார் அளித்துள்ளனர்.சமூக வலைதளப் பக்கத்தில் சர்ச்சைக் கருத்துக்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ள அவர் பல்வேறு பிரச்சனைகளையும் சந்தித்து வருகிறார்.இந்நிலையில் வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படும் என்று பிரதமர் அறிவித்திருந்த நிலையில்,விவசாயிகளை பயங்கரவாதிகளோடு ஓப்பிட்டும், சிக்கியர்கள் குறித்தும் சர்ச்சை கருத்தை தனது இன்ஸ்டா கிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் தங்களது உணர்வுகளை புண்படுத்தியதாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் மீது சீக்கிய தலைவர்கள் புகார் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஒரு திரைப்படத்தை எதிர்த்து நாட்டில் உள்ள எல்லா பிரச்னைகளையும் மூடிவிட்டார்கள் என்று சீமான் கூறுவது

  • சரி
  • தவறு
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்